புதிய வகை ஹெராயின் பறிமுதல்: கம்போடிய நாட்டவர் கைது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஹெராயின் வகையைச் சேர்ந்த எம்பிடமைன் என்ற போதைப் பொருள் சிக்கியது. இதை கடத்திய கம்போடியாவைச் சேர்ந்த சோன்பீத் என்பவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது போதைப் பொருட்கள் பிடிபடுவது சகஜமாகி விட்டது. இந்த நிலையில் இன்று இதுவரை சிக்கியிராத புதிய வகை ஹெராயின் போதைப் பொருள் சிக்கியது.
கம்போடியாவைச் சேர்ந்தவர் சோன்பீத் (30). இவர் ஒரு வாரத்திற்கு முன்பு சுற்றுலா விசா மூலம் இந்தியாவுக்கு வந்தார். மும்பைக்கு வந்த அவர் அங்கிருந்து டெல்லி சென்றார். பின்னர் நேற்று இரவு சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் பாங்காக் செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். அவர் மீது சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், சோன்பீத் வைத்திருந்த உடமைகளை சோதனையிட்டனர். அப்போது கார்பன் தாளில் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
1.1 கிலோ எடையுள்ள அந்தப் போதைப் பொருளின் பெயர் எம்பிடமைன். இது ஹெராயின் வகையைச் சேர்ந்ததாகவும். இதுவரை இந்த போதைப் பொருள் சென்னையில் சிக்கியதில்லை. இதன் சர்வதேச மதிப்பு ரூ. 1 கோடியாகும்.
போதைப் பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை ஆய்வகச் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். சோன்பீத் கைது செய்யப்பட்டார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications