அக்.2 முதல் பொது இடங்களில் 'தம்' அடிக்க தடை

Subscribe to Oneindia Tamil

Smoking
டெல்லி: அலுலகம், ஹோட்டல் போன்ற பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கும் சட்டம் அக்டோபர் 2ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. மீறுவோருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

இளைஞர்களை புகையிலை பழக்கத்தில் இருந்து காக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என்ற சட்டத்தை எந்த மாநில அரசும் கடுமையாக்கவில்லை. பள்ளி, கல்லூரிகள் இருக்கும் பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி முதல் பொது இடங்களில் புகை பிடிக்க நாடு முழுவதும் தடை விதிக்கப்படுகிறது. இதன்படி ஹோட்டல், ரெஸ்டாரன்ட், அலுவலகம், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

மீறுவோருக்கு, தேசிய புகையிலை தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். வரும் காலத்தில் இந்த சட்டம் திருத்தம் செய்யப்பட்டு அபராதம் ரூ.1000 வரை உயர்த்தப்படும்.

டிசம்பர் முதல் புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கை படங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பள்ளி சீரார்கள் 14.1 சதவீதத்தினர் புகை பழக்கத்திற்கு ஆளாகியிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது வேதனை அளிக்கிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+