காவல் நிலையம் சூறை-15 வக்கீல்கள் மீது வழக்கு
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற காவல் நிலையத்தை சூறையாடியதாக 15 வக்கீல்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சேலத்தைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்திருந்த ஹேபியஸ் கார்பஸ் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த வழக்கு தொடர்பாக ஆஜராக வந்திருந்த சேலம் கான்ஸ்டபிள் ஒருவரை வக்கீல்கள் 3 பேர் சேர்ந்து ஓட ஓட விரட்டி அடித்தனர்.
நீதிபதி கண் முன்பாகவே இந்த சம்பவம் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த வக்கீல்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர் போலீஸார்.
ஆனால் போலீஸால் பொய் வழக்குப் போடுவதாக உயர்நீதிமன்ற வக்கீல்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நேற்று இதைக் கண்டித்து அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது பெரும் திரளான வக்கீல்கள் உயர்நீதிமன்ற காவல் நிலையத்திற்குள் புகுந்து காவல் நிலையத்தை சூறையாடினர்.
முதல் தகவல் அறிக்கைகள் அடங்கிய கோப்புகளை கிழித்து வீசி எறிந்து ரகளை செய்தனர்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்க செயலாளர் மோகன கிருஷ்ணன், ரஜினிகாந்த், லிங்கம், காமராஜ் உள்ளிட்ட 15 வக்கீல்கள் மீது 147, 148, 506(2) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications