பாக், இலங்கையை விட பின் தங்கும் இந்தியா!-உலக வங்கி

சர்வதேச நிதிக் கழகம் மற்றும் உலக வங்கி இணைந்து 2009-ம் ஆண்டில் சிறப்பான வர்த்தகம் செய்ய வாய்ப்புள்ள (Doing Business report 2009) நாடுகள் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 181 நாடுகள் இடம் பெற்றுள்ள இந்தப் பட்டியலில் சர்வதேச அளவில் 77-வது இடத்திலும், தெற்காசிய நாடுகளில் முதலிடத்தில் உள்ளது பாகிஸ்தான். அதற்கடுத்த இடங்களில் இலங்கை (102), பங்களாதேஷ் (110), நேபாளம் (121) ஆகிய நாடுகள் உள்ளன.
இந்தப் பட்டியலில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள இடம் 122. ஒரு வர்த்தகம் அல்லது நிறுவனத்தைத் துவங்குவதற்கான வாய்ப்புகள், கடன் வசதி, வரி செலுத்துதல், ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துதல், அரசின் சலுகைகளைப் பெறுதல், நிறுவனத்தைக் கலைத்தல் போன்ற பல்வேறு காரணிகளை ஆராய்ந்து அவற்றின் அடிப்படையில் இந்த அறிக்கையை தயாரிக்கின்றன சர்வதேச நிதிக்கழகம் மற்றும் உலக வங்கி.
இலங்கையில் பெருளாதாரம் சீர்கெட்டிருந்தாலும், அந்நாடு பல்வேறு தாராள வர்த்தகக் கொள்கைகளை அமல்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் தெற்காசியாவின் முன்னணி நாடாக இலங்கை திகழ்வதாக இந்த அறிக்கை கூறுகிறது.
இலங்கையில் நிறுவனத்தைத் துவங்குவது, நிறுவன வளர்ச்சிப் பணிகளுக்கு கடன் பெறுவது, கடனைத் திரும்பச் செலுத்துவது, அல்லது சட்டப்பூர்வமாக நிறுவனத்தைக் கலைப்பது எல்லாமே சிக்கலற்ற நடைமுறைகளைக் கொண்டுள்ளது.
ஆனால் இந்தியாவில் அவை அனைத்துமே மிகவும் சிக்கலான விஷயங்கள் என அறிக்கையில் கூறியுள்ளது உலக வங்கி.
இந்த அறிக்கையின்படி உலக வர்த்தகத்தில் தொடர்ந்து முதலிடம் பெற்று வரும் நாடு சிங்கப்பூர்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications