ஜப்பான், இந்தோனேஷியா, சிலியில் நிலநடுக்கம்

Subscribe to Oneindia Tamil

Japan map
டோக்கியோ: ஜப்பான், இந்தேனேஷியா, சிலி ஆகிய நாடுகளில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜப்பானிலும் இந்தேனேஷியாலும் அடுத்தடுத்து இரண்டு முறை கடும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஜப்பானிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.0 புள்ளிகளாகப் பதிவானது. ஜப்பானின் வடக்கே உள்ள ஹோகைடோவுக்கு அருகே கடலுக்கடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், பெரிய அளவில் சுனாமி அலை ஏதும் ஏற்படவில்லை. 4 இன்ஞ் அளவுக்கே சிறிய அலை உருவானது. இந்த நிலநடுக்கத்தில் ஹோகைடோ பகுதி கடுமையாகக் குலுங்கியது.

இதைத் தொடர்ந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்தோனேஷியாவை நிலநடுக்கம் தாக்கியது. மொலுக்கா கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.6 புள்ளிகளாகப் பதிவானது. இதையடுத்து அங்கும் பெரும் பீதி பரவியது.

சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. கடலோரப் பகுதி மக்கள் வீடுகளை விட்டு ஓடினர். ஆனால், சுனாமி ஏதும் ஏற்படவில்லை.

அதே போல சிலி நாட்டிலும் 5.8 புள்ளிகள் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

நேற்று ஈரானிலும் ஐக்கிய அரபு எமிரேட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று இந்த நடுக்கங்கள் ஏற்பட்டன. ஈரானிய நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்து 6 பேர் பலியாகியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+