ஹஜ்-1.23 லட்சம் யாத்ரீகர்களுக்கு அனுமதி
டெல்லி: ஹஜ் கமிட்டி மூலம் புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து லட்சக் கணக்கான முஸ்லீம்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு மத்திய அரசு மானியத்துடன் கட்டணச் சலுகை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை அக்டோபர் மாதம் முதல், தொடங்கவுள்ளது.
இதையடுத்து, யாத்திரை செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை 1.10 லட்சத்திலிருந்து, 1.23 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கூடுதலாக 13,211 பேர் பயனடைவார்கள்.
புனிதப் பயணம் செல்லும் நபர்களிடமிருந்து கட்டணத் தொகையாக ரூ.12,000 மட்டுமே வசூலிக்கப்படும். இது மட்டுமின்றி, யாத்திரை செல்லும் நபர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே உள்ள 16 புறப்படும் மையங்களுடன், இந்தூரிலிருந்தும் தங்கள் பயணத்தை தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பயணக் கட்டணத்தில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications