இந்தியாவின் வறுமை 27.5 சதவிகிதமாக குறைவு: ஐநா
டெல்லி: சுகாதாரம், ஆரம்பக் கல்வி என பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கியத் துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளதால், இந்தியாவின் வறுமை 27.5 சதவிகிதமா குறைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
இதேநிலை தொடர்ந்தால் வரும் 2015-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மேலும் 19 சதவிகித மக்கள் வறுமையிலிருந்து விடுபடும் வாய்ப்புள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இந்த ஆயிரமாவது ஆண்டில் உலகம் சாதிக்க வேண்டியவை குறித்து ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையை, டெல்லியில் வெளியிட்ட மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூறியதாவது:
ஐநாவின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் வளர்ச்சிக்கான சாத்தியம் மற்றும் காரணிகள் ஏராளம் உள்ளன. ஆனால் இப்போது இந்தியாவுக்குத் தேவையானதெல்லாம் நல்ல ஆட்சிமுறை மற்றும் அதற்கு தோள்கொடுக்கக் கூடிய அமைப்புகள்தான்.
இந்த மில்லினியம் ஆண்டில் கிட்டத்தட்ட நமது இலக்குகளில் பாதியை நாம் அடைந்துவிட்டோம். அடுத்த ஐந்தாண்டுகளில் முழு இலக்கையும் அடைய தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது, என்றார்.
இதேபோல எய்ட்ஸ் ஒழிப்பிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சுத்தமான குடிநீர், மக்களுக்கு சுகாதாரமான வாழ்க்கைச் சூழலை உண்டாக்கித் தருவது போன்றவற்றிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், பெருகி வரும் விலைவாசி உயர்வு மேலும் 10 கோடி மக்களை வறுமைக்குத் தள்ளிவிடும் அபாயம் உள்ளதாகவும் ஐநா எச்சரித்துள்ளது.
உண்மையான பொருளாதார வளர்ச்சியை அடைய விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications