'மின்சாரம்': விஜயகாந்த்துக்கு அதிமுக சவால்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக ஆட்சி காலத்தில் காற்றாலை திட்டத்தை நம்பியதே தற்போதைய மின்வெட்டுக்கு காரணம் என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கும் வகையில் விஜயகாந்த் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாட்டில் உச்சபட்ச மின்சாரத் தேவை 8,775 மெகாவாட் என்ற நிலையில் 10,011 மெகாவாட் அளவுக்கு மின்சார உற்பத்தித் திறன் இருந்தது. அதுமட்டுமின்றி உபரியாக மின்சார உற்பத்தி செய்யும் மாநிலமாகவும் இருந்தது.
இந்த 10,011 மெகாவாட் மின் உற்பத்தியில் காற்றாலையில் இருந்து பெறப்படும் மின்சாரம் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்பதை விஜயகாந்த் தெரிந்து கொள்ள வேண்டும். காற்றாலை மின்சாரம் என்பது ஒரு கூடுதலான ஏற்பாடுதான்.
இந்த கூடுதல் காற்றாலை மின் உற்பத்தியிலும் அதிமுக ஆட்சியில் தமிழகம் முதலிடம் வகித்தது. இதற்காக தேசிய விருதும் கிடைத்தது.
இந்த அடிப்படை விவரங்களை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டிருப்பது அவரது அறியாமையைத்தான் காட்டுகிறது.
22 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரத்துறை அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இந்த விவரங்கள் தெரிய வாய்ப்பில்லை. எனவே விஜயகாந்த்துக்கும் அதைப்பற்றி தெரிய வாய்ப்பில்லை.இந்த அறிக்கை மூலம் தற்போது பண்ருட்டி ராமச்சந்திரனும், விஜயகாந்த்தும் உண்மை நிலையை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் 3,430.75 மெகாவாட் மின் உற்பத்தி நிறுவு திறன் புதிதாக ஏற்படுத்தப்பட்டது. தற்போது அனல் மின் நிலையங்கள் சரியாக பராமரிக்கப்படாததாலும், மத்திய தொகுப்பில் இருந்து நமக்குள்ள உரிமையை கருணாநிதி கேட்டுப் பெறாததாலும் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதையும் விஜயகாந்த் புரிந்துக் கொள்ள வேண்டும்.
எனவே மின் தட்டுப்பாட்டுக்கு அதிமுக மீது பழி போடுவது விஜயகாந்த் நிறுத்திக் கொள்ள வேண்டும். மின்சாரத் துறையில் ஜெயலலிதா செய்த சாதனைகள் குறித்து ஒரே மேடையிலோ அல்லது பத்திரிகையாளர்கள் முன்னிலையிலோ புள்ளி விவரங்களுடன் நான் விவாதிக்கத் தயார். அதற்கு விஜயகாந்த் தயாரா? என்று சவால் விட்டுள்ளார் விஸ்வநாதன்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications