மகளிர் சுய உதவிக் குழு செயல்பாடுகளுக்கு ஸ்டாலின் பாராட்டு
விருதுநகர்: தமிழ்நாட்டு மகளிர் சுய உதவிக் குழுக்கள்தான் நாட்டில் முதலிடத்தில் உள்ளன. அவர்கள் நம்பிக்கைக் கொண்டு அதிகளவில் கடன்களை வழங்கி வருகிறது இந்தியன் வங்கி என்று பாராட்டியுள்ளார் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அரசு சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா விருதுநகரில் நடந்தது. கலெக்டர் சந்திரசேகரன் வரவேற்றார்.
விழாவில் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் அமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:
இந்த விழாவில் 4,193 திட்டப்பணிகளுக்கு, ரூ.58.54 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா நடந்துள்ளது. மேலும், 1,500 மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையில் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த குழுக்கள் தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக தொடங்கப்படவில்லை.
தமிழகத்தில் பெண்களின் தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்கள் யார் தயவையும் எதிர்பாராமல் சுயமாக வாழ வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிறு தொழில்கள் தொடங்கி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளவும் சுய உதவி குழுக்கள் தொடங்கப்பட்டன.
தமிழ்நாட்டில் மூன்று லட்சத்து 70,212 சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இவைகளின் மொத்த சேமிப்பு தொகை இதுவரை ரூ. 1,826 கோடி. இந்தியாவிலேயே தமிழகத்தில் உள்ள சுய உதவிக் குழுக்கள்தான் முதலிடம் வகிக்கின்றன.
வங்கிகளில் வாங்கும் கடனை மகளிர் சுய உதவிக் குழுக்கள்தான் திருப்பி செலுத்துகின்றன. இந்தியன் வங்கி நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,824 கோடி கடன் வழங்கியது. இதில், ரூ.1,058 கோடி தமிழக குழுக்களுக்குத்தான் வழங்கியுள்ளது.
தமிழகப் பெண்கள், கடனை ஒழுங்காக திருப்பி செலுத்திவிடுவார்கள் என்று நம்பிக்கையில்தான் இந்த வங்கி இவ்வளவு கடன் வழங்கியுள்ளது. பெண்களுக்கு சம உரிமை மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் பெண்களைத்தான் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் போன்ற பல திட்டங்களை முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார்.
பெண்களுக்காக, முதல்வர் கருணாநிதி அற்புதமான திட்டங்களை உருவாக்கி தருகிறார். அவைகளைப் பெண்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications