காபூல் இந்திய தூதரகம் மீதான தாக்குதல்: 'பாக். தளபதிக்கு தெரியும்'!
நியூயார்க்: காபூலில் உள்ள இந்திய தூதரகம் மீதான தீவிரவாத தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவத் தளபதி அஷ்பாக் பர்வேஸ் கியானி உள்ளிட்ட பாகிஸ்தான் தலைவர்களுக்கு முன்கூட்டியே தெரியும் என அமெரிக்க உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் அமெரிக்க உளவுப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், காபூலில் இந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த தீவிரவாதத் தாக்குதல் குறித்து அமெரிக்க உயர் தலைவர்களுக்கு முன்கூட்டியே தெரியும். பாகிஸ்தான் ராணுவத் தளபதி கயானியும் அவர்களில் ஒருவர்.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐக்கும் தொடர்பு இருக்கும் என நம்ப வலுவான காரணங்கள் உள்ளன.
கயானிக்கு இது தெரியாது என்று சொன்னால் அதை யாரும் நம்ப முடியாது. நம்பவும் வாய்ப்பில்ைல.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அப்பிராந்தியத்தில் தனது நிலையை வலுவாக்கிக் கொள்ள தீவிரவாத அமைப்புகளின் உதவி தேவை என்று பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நினைக்கிறார்கள்.
இதை விட முக்கியமாக, காபூல்தாக்குதலில் ஐ.எஸ்.ஐக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்தாலும் கூட கவலை இல்ைல என்றும் ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் நினைக்கின்றனர். எதையும் மறைக்க அவர்கள் விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க உளவுத்துறை முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications