கட்சி மாறி ஓட்டு 2 எம்.பிக்கள் பதவி பறிப்பு
டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்களித்த, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த இரு எம்.பிக்களின் பதவியை பறித்து லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஹரியானா முன்னாள் முதல்வர் பஜன்லாலின் மகன் குல்தீப் பிஷ்னோய். இவர் தனது தந்தையுடன் இணைந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி, தந்தை தொடங்கிய புதிய கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
இதேபோல உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாடிக் கட்சி எம்.பி. ஜெயப்பிரகாஷ் ராவத். இவரும் கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டு வந்தார்.
கடந்த ஜூலை 22ம் தேதி லோக்சபாவில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இவர்கள் இருவரும் கட்சி கொறடா உத்தரவை மீறி, மாறி வாக்களித்தனர்.
இதுகுறித்து லோக்சபா சபாநாயகரிடம் இரு கட்சிகளும் புகார் கொடுத்திருந்தன. இரு எம்.பி.க்களின் பதவியையும் பறிக்க வேண்டும் என்று அவை கோரியிருந்தன.
இதுகுறித்துப் பரிசீலித்து வந்த சபாநாயகர், தற்போது இரு எம்.பி.க்களின் பதவியையும் பறித்து உத்தரவிட்டுள்ளார். பிஷ்னோய் கடந்த 10ம் தேதியிலிருந்தும், ராவத் 11ம் தேதி முதலும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications