24 மணி நேர மருத்துவ நிலையங்களாக மாறும் ஆரம்ப சுகாதார மையங்கள்
சென்னை: செப்டம்பர் 15ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 1421 ஆரம்ப சுகாதார மையங்களும், 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் முழு நேர மருத்துவ நிலையங்களாக தரம் உயருகின்றன.
இந்த ஆரம்ப சுகாதார மையங்களில் கர்ப்பிணிகளுக்கு இலவச உணவும் வழங்கப்படும். கடந்த சட்டசபைக் கூட்டத் தொடரில் இதுதொடர்பான அறிவிப்பை சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டிருந்தார். தற்போது அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டு விழாவையொட்டி இந்தத்திட்டம் செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வருகிறது.
முதல்வர் கருணாநிதி இதை தொடங்கி வைக்கிறார். இந்த சேவை தற்போது 1000 ஆரம்ப சுகாதார மையங்களில் அமலில் உள்ளது. செப்டம்பர் 15ம் தேதி முதல் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படுகிறது.
அன்று முதல் பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணிப் பெண்கள் அனைவருக்கும் 24 மணி நேரமும் இங்கு பிரசவம் பார்க்கப்படும். மேலும், ஒரு நாளைக்கு மூன்று நேரம் சாப்பாடும் இலவசமாக வழங்கப்படும்.
ஆரம்ப சுகாதார மையங்கள் ஆண்டுக்கு 50 ஆயிரம் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சைகளையும், 2.5 லட்சம் பிரசவங்களையும் மேற்கொள்கின்றன.
ஆரம்ப சுகாதார மையங்களில் இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ரூ. 1.61 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
மேலும் ஆரம்ப சுகாதார மையங்களில் ஸ்கேனிங் செய்ய வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாரம் ஒரு முறை மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ. 25.50 லட்சம் நிதி, தேசிய ஊரக நல்வாழ்வுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications