டெக்ஸாஸ் கடலோரத்தை தாக்கியது இகே சூறாவளி
ஹூஸ்டன்: மிகப் பெரிய சூறாவளியான இகே, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண கடலோரப்ப குதியை இன்று பலத்த காற்றுடன் தாக்கியது. இதையடுத்து அங்கிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
மெக்ஸிகோ வளைகுடாவில் தொடங்கி கியூபா, ஹைதி உள்ளிட்ட நாடுகளைத் தாக்கிய இகே தற்போது அமெரிக்காவின் கடலோர மாகாணங்களைத் தாக்கத் தொடங்கியுள்ளது.
பலத்த காற்றுடன் டெக்ஸாஸ் கடற் பகுதியை இகே இன்று தாக்கியது. ஏற்கனவே கடந்த சூறாவளி காரணமாக இப்பகுதியின் பல இடங்களில் புகுந்த கடல் நீர் இன்னும் வெளியேறாமல் உள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
சூறாவளி தாக்கியதன் காரணமாக பலத்த மழையும், கடும் காற்றும் அடித்துக் கொண்டிருக்கிறது. பல பகுதிகளில் கடல் நீர் உள்ளே புகுந்து வெள்ளக்காடாகியுள்ளது. பல எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. அங்கெல்லாம் தண்ணீர் புகுந்துள்ளது.
மணிக்கு 966 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. வட கிழக்கு நோக்கி இந்த சூறாவளி தற்போது நகர்ந்து வருகிறது. இன்று மாலை கால்வெஸ்டன் பகுதியை அது கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இகே தாக்குதல் குறித்து ஓக்லஹாமா சிட்டியில் பேசிய அதிபர் ஜார்ஜ் புஷ் கவலை தெரிவித்தார்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications