பாம்புக் கடியால் ஆண்டுக்கு லட்சம் பேர் பலி!
பெரம்பலூர்: உலகில் பாம்புக்கடிக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் பலியாகின்றனர். இதுகுறித்த ஆராய்ச்சிகளுக்காக, பாம்புகள் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடைகளை நீக்க வேண்டும் என லண்டன் விஞ்ஞானி கூறியுள்ளார்.
பெரம்பலூரில் தஞ்சை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி சார்பில் பாம்புக்கடியினால் ஏற்படும் விளைவுகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் வரதராஜன் குத்து விளக்கு ஏற்றிவைத்து கருத்தரங்கை துவக்கி வைத்தார்.
இதில் லண்டன் ரீடிங் பல்கலைகழகத்தின் பாம்புகள் ஆராய்ச்சிகள் பிரிவு விஞ்ஞானி டாக்டர் சக்திவேல் வையாபுரி கலந்து கொண்டு பேசுகையில், உலக நாடுகளில் 30 லட்சம் பேரை கொடிய விஷப்பாம்புகள் கடிக்கின்றன.
இதில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் பரிதாபமாக இறக்கின்றனர்.
பாம்புக் கடிக்கு பாம்பின் விஷத்தில் இருந்து தான் மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில், வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் மட்டுமே பாம்புகள் ஆராய்ச்சி செய்யப்படுகிறது. இதுபோன்ற ஆராய்ச்சிக்கு மற்ற பல்கலைக்கழகங்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
பாம்பு பற்றி ஆராய்ச்சிக்காக இங்கிலாந்து போன்ற வெளி நாடுகளுக்கு பாம்புகள் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடைகளை விலக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications