விஜயகாந்த்தின் அரிசி விமர்சனத்திற்கு கருணாநிதி பதிலடி
சென்னை: நான் அறிவித்துள்ள ஒரு ரூபாய் அரிசித் திட்டம் ஏழைகளுக்காக. வசதி படைத்தவர்களுக்கு அல்ல. பணக்காரர்கள் சிலர் வேண்டுமானால் (விஜய்காந்த்) வேண்டுமானால் விலை அதிகமுள்ள உப்பை கிலோ கணக்கில் வாங்கிச் சாப்பிடட்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
திரைப்பட துறையினருக்கான நிதியுதவி வழங்கும் விழாவில் தனது சிறப்புரையில் இதுகுறித்து அவர் குறிப்பிட்டதாவது:
இங்கே நடிகை குஷ்பு பேசும்போது, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்குவதை குறிப்பிட்டு பாராட்டினார். இதைப் பாராட்டக் கூட சிலர் இருக்கிறார்களே என்பதை எண்ணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. நல்ல வேளை குஷ்பு தமிழ்நாட்டில் பிறக்கவில்லை. அதனால்தான் அவர் பாராட்டுகிறார்.
ஆனால் இங்கே சிலர், ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்கிறார்கள். ஆனால் கிலோ உப்பு 8 ரூபாய் தெரியுமா என்று கிண்டலாகக் கேட்கிறார்கள்.
பரவாயில்லை. கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வாங்கி ஏழைகள் சாப்பிட்டும். இவர்கள் (விஜய்காந்த்) பணக்காரர்கள்தானே... அதே அளவு உப்பை ஒரு ரூபாய்க்கு வாங்கி சாப்பிடக் கூடிய திறமை அவர்களுக்கு இருந்தால், நான் அவர்களை பாராட்ட தயாராக இருக்கிறேன், என்றார் கருணாநிதி.
சமீபத்தில் தேதிமுக தலைவரும் நடிகருமான விஜய்காந்த், ஒரு ரூபாய் அரிசித் திட்டத்தை விமர்சித்திருந்தார். ஏழைகளுக்கு உப்பு கிலோ எட்டு ரூபாயாகிவிட்டது. ஆனால் கிலோ அரசி 1 ரூபாய் என்கிறார்கள். இது சரிதானா என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு முதல்வர் கொடுத்த பதிலடி இது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications