தமிழகம் முழுவதும் உஷார் நிலை - விடிய விடிய ரெய்டு
சென்னை: டெல்லி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். முக்கிய நகரங்களில் விடிய விடிய போலீஸார் சோதனை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலரைக் கைது செய்தனர்.
டெல்லி தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தமிழகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், முக்கிய கட்டடங்கள் உள்ளிட்டவற்றுக்கு பலத்த பாதுகாப்பும், தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முக்கிய நகரங்களின் எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது. நகருக்குள் வரும் வாகனங்கள், வெளியில் செல்லும் வாகனங்கள் தீவிரமாக பரிசோதிக்கப்படுகின்றன.
சென்னையில் உள்ள மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில், நெல்லை நெல்லையப்பர் கோயில் போன்ற முக்கியமான கோயில்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
சென்னையில் மக்கள் கூடும் இடங்களான சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம், திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்திற்கிடமானவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
நேற்று இரவு காவல்துறை ஆணையர் சேகர் தலைமையில் சென்னை முழுவதும் வாகன தணிக்கை சோதனையும், லாட்ஜுகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் சோதனையும் நடைபெற்றது.
இந்த சோதனையில் மொத்தம் 408 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதாக 164 பேர் மீதும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 68 பேர் மீதும், பழைய குற்றவாளிகள் 15 பேரையும் போலீசார் பிடித்து வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து பாதுகாப்பு சோதனைகள் நடந்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications