மின்தடையால் உயர்நீதிமன்ற லிப்ட்டில் சிக்கிய நீதிபதிகள்!
சென்னை: உச்சநீதிமன்ற நீதிபதி அரிசித் பசாயத் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உயர்நீதிமன்ற லிப்ட்டுக்குள் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரை மணி நேரம் தவிப்புக்குப் பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர். மின்தடைதான் இந்த தவிப்புக்கும், சிக்கலுக்கும் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணையத்தின் சார்பில் நேற்று மெகா லோக் அதாலத் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 300 மோட்டார் வாகன விபத்து மேல் முறையீட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டு பைசல் செய்யப்பட்டன.
உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி அரிசித் பசாயத், தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி மற்றும் எட்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்று 160 வழக்குகளை தீர்த்து வைத்து உத்தரவிட்டனர்.
அதாலத் முடிந்தவுடன், 2வது மாடியில் உள்ள லிப்ட்டில் நீதிபதி பசாயத், அவரது மனைவி சுபாலா, தலைமை நீதிபதி கங்குலி, ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி மீனா குமார் உள்ளிட்ட 5 பேர் ஏறினர். லிப்ட் கீழே இறங்கத் தொடங்கியபோது திடீரென மின்சாரத் தடை ஏற்பட்டது. இதனால் லிப்ட் நடு வழியில் நின்று போனது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக தீயணைப்புப் படையினரும், போலீஸாரும் விரைந்து வந்தனர். அனைவரும் கடுமையாக முயற்சித்து அரை மணி நேரத்திற்குப் பின்னர் லிப்ட்டை தரைக்குக் கொண்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து அரை மணி நேர தவிப்புக்குப் பின்னர் அனைவரும் வெளியே வந்தனர்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications