ஈழத் தமிழர் பாதுகாப்பு: இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்
டெல்லி: விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தும் அதே சமயத்தில், அந்த பகுதியில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இலங்கை அரசை கேட்டுக் கொண்டுள்ளதாக ராணுவ அமைச்சர் அந்தோணி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
விடுதலை புலிகள் மீதான தாக்குதலை இலங்கை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் அதே சமயத்தில், புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
ஈழ தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. இதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை கேட்டுக் கொண்டுள்ளோம். இது தொடர்பான எங்களின் கவலையை இலங்கையிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.
உலக நாடுகளுடன் பொருளாதார ரீதியாக நாம் மேற்கொண்டுள்ள உறவுகள், ராணுவ விஷயத்தில் நாம் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளன.
சர்வதேச அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்ய, மற்ற நாடுகளுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இந்த விஷயத்தில், ஐநாவின் அமைதிப் பணிகளில் நம் நாட்டுப் படைகள் தொடர்வதன் மூலம், இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications