டெல்லி குண்டுவெடிப்பு: 3 சதிகாரர்கள் படங்கள் வெளியீடு
டெல்லி: டெல்லியில் வெடிகுண்டு வைத்ததாக சந்தேகப்படும் 3 பேரின் வரைபடங்களை டெல்லி போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 14 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும், சில சாட்சிகளும் அவர்களுக்குக் கிடைத்துள்ளனர்.
12 வயது பலூன் விற்கும் சிறுவன் ஒருவன், சென்ட்ரல் பார்க் மற்றும் பாரகம்பா சாலையில் குப்பைத் தொட்டியில் வெடிகுண்டுளை தீவிரவாதிகள் வைத்ததை நேரில் பார்த்ததாக கூறியது பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. அதேபோல தந்தை - மகன் ஆகிய இரு சாட்சியங்களும் தீவிரவாதிகளைப் பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவர்கள் கூறிய தகவல்களின் அடிப்படையில் போலீஸார் 3 தீவிரவாதிகளின் முகங்களை வரைபடங்களாக வரைந்துள்ளன். இந்தப் படங்கள் நேற்று வெளியிடப்பட்டன.
இந்த 3 பேர் குறித்த தகவல்களை தெரிவிப்போர் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications