அரிசி திட்ட தொடக்க விழா-திமுக எம்.பி, எம்.எல்.ஏ 'வாக் அவுட்'
திருவள்ளூர்: திருவள்ளூரில் நடந்த ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசித் திட்ட தொடக்க விழாவில் திமுக எம்.பி. வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நேற்று முன்தினம் நடந்த விழாவில், முதல்வர் கருணாநிதி இத்திட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து, நேற்று தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், அதிகாரிகள் இத்திட்டத்தை துவக்கி வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திட்டத்தின் துவக்க விழா, திருவொற்றியூரில் கலெக்டர் ராஜேந்திர குமார் தலைமையில் நடந்தது. தொகுதி எம்.எல்.ஏ.,வும் மீன்வளத் துறை அமைச்சருமான கே.பி.பி. சாமி, திட்டத்தை துவக்கி வைத்தார்.
பலரும் வரிசையாகப் பேசினர். பின்னர் ஸ்ரீபெரும்புதூர் தி.மு.க., எம்.பி., கிருஷ்ணசாமி பேசினார். அவர் பேசி முடித்ததும் திடீரென பி.ஆர்.ஓ.,வை அழைத்த அமைச்சர் சாமி, நகராட்சி கவுன்சிலரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான தனியரசு என்பவரை பேச விடுமாறு கூறினார்.
இதையடுத்து, தனியரசு பேசினார். இதனால், எம்.பி. கிருஷ்ணசாமி ஆத்திரமடைந்தார். நான் ஒரு எம்.பி. நான் பேசிய பின்னர் கவுன்சிலரை எப்படி பேச அனுமதிக்கலாம் என்று கோபத்துடன் கூறி விட்டு அங்கிருந்து வெளியேறினார்.
கவுன்சிலருக்குப் பின்னர் மாவட்ட செயலரும் திருவள்ளூர் எம்.எல்.ஏ.,வுமான சிவாஜி பேசிவிட்டு, தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ., இருவரும் அரசு விழாவில் வெளிநடந்ததால், ஆட்சித் தலைவரும், மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்து போயினர்.
அரிசியில் அரசியலா?
-
திமுகவில் எந்த சமூகத்தவருக்கு அதிக சீட்? வன்னியர், கவுண்டர்களுக்கு முன்னுரிமை? இதோ முழு லிஸ்ட்! -
234ஐ விடுங்க.. தமிழ்நாடு தேர்தல் முடிவை தீர்மானிக்க போகும்.. அந்த 131 தொகுதிகள்.. எப்படி தெரியுமா? -
ஹரி நாடார், ராக்கெட் ராஜா வேட்புமனு நிராகரிப்பு.. மனோஜ் பாண்டியனுக்கு சாதகமாக மாறிய ஆலங்குளம் தொகுதி -
மொத்தமாக அள்ளும் திமுக.. மீண்டும் ஸ்டாலின் ஆட்சி தானாம்! அதிமுக, விஜய்க்கு படுதோல்வி! புதிய சர்வே -
அடுத்தடுத்து வெளியான 4 சர்வே.. எல்லாம் சொல்லும் ஒரே விஷயம்.. நாம் தமிழர் கட்சிக்கு பெரிய சிக்கல்! -
11% வாக்கு வித்தியாசம்.. திமுக 200+ கண்டிப்பாக வரும்! சர்வே சொல்லும் ரகசிய தகவல்.. கவனிச்சீங்களா! -
எஃகு கோட்டையாக நிற்கும் எடப்பாடி தொகுதி.. இங்கு எப்போதும் அதிமுகவின் ஆட்டம் தான்! கடந்து வந்த பாதை -
“வெற்றி வாய்ப்பு சூப்பரா இருக்கு.. 234 தொகுதிகளிலும் வெல்வோம்”.. கேட்டதுமே அழுத்தமாக சொன்ன ஸ்டாலின்! -
“இதைச் சொல்லி பிரச்சாரம் செய்வீர்களா?” தமிழகம் வரும் பாஜக தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்! -
8000 ரூபாய் கூப்பன் அறிவிப்பு!கவர்ச்சி அறிவிப்பா? தொலைநோக்குத் திட்டமா? -
கிளைமேக்ஸ் வந்தாச்சு.. தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நிறைவு.. பரபரக்கும் தேர்தல் களம் -
இன்று வெடித்து கொட்ட போகுது கனமழை.. சுத்து போட்டு அடிக்கும் மழை மேகங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications