எல்லா மாநிலங்களிலும் மின்வெட்டு பிரச்சனை: அமைச்சர் வேங்கடபதி
தர்மபுரி: நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மின் வெட்டு பிரச்சனை உள்ளதாக மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதி கூறியுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் வெண்ணந்தூரில் ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி வழங்கும் விழா கலெக்டர் அமுதா தலைமையில் நடைபெற்றது. மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதி திட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில்,அண்ணாவின் ஒரு படி அரிசி திட்டம் முழுமை பெறாமல் போனது. இன்று முதல்வர் கருணாநிதி ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு வழங்கி வருகிறார்.
இந்த திட்டத்தில் வழங்கப்படும் அரிசி தரமற்றது என்று சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தரமான அரிசிதான் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 2ம் தேதி முதல் ரூ.67 மதிப்புள்ள வீட்டு மளிகைப் பொருட்களை ரூ.50க்கு முதல்வர் கருணாநிதி வழங்க உள்ளார்.
மின் வெட்டு பிரச்சனை தமிழகத்தில் மட்டும் இல்லை. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மின்வெட்டு பிரச்சனை உள்ளது. மின் உற்பத்தி குறைந்ததால் தான் தேவைக்கு ஏற்ப வழங்க முடியவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications