ராமேஸ்வரம் கடலில் குளித்த கடற்படை வீரர் பலி

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே கடலில் குளித்த கடற்படை வீரர்கள் மூன்று பேர் அலையில் சிக்கினர். இதில் ஒருவர் பலியானார். மற்ற இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேகாலாயா மாநிலத்தை சேர்ந்தவர் சில்லா, பஞ்சாப்பை சேர்ந்த பால் மற்றும் தாஸ். இவர்கள் தனுஷ்கோடி கடற்படை கண்காணிப்பு அலுவலகத்தில் பணிபுரியாற்றி வந்தனர்.
மூன்று பேரும் சேர்ந்து முகுந்தராயர் சத்திரம் பகுதியில் உள்ள கடலில் குளித்தனர்.

அப்போது வந்த பெரிய அலையில் மூன்று பேரும் சிக்கி மூழ்கினர். அவர்களை மீனவர்கள் மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சில்லா பரிதாபமாக இறந்தார்.

மற்ற இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம், முகுந்தராயர் சத்திரம் பகுதியில் உள்ள கடல் பகுதியில் அலையின் சீற்றம் அதிகாமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி குளித்தபோது இந்த விபத்து நடந்ததாக போலீஸார் கூறினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+