டார்ஜிலிங் செல்லும் ரயில்களில் ரயில் பணிப் பெண்கள்

Subscribe to Oneindia Tamil

மும்பை: நாட்டிலேயே முதல் முறையாக சீருடை அணிந்த பணிப் பெண்கள், டார்ஜிலிங் செல்லும் ரயில்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

விமானங்களில் பணிப் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளது போல், ரயில்களிலும் முதல் வகுப்பு பெட்டிகளில் பணிப் பெண்கள் நியமிக்கப்படுவர். இவர்கள் பயணிகளுக்கு தேவையான உணவுப் பொருட்களை பரிமாறுவது உள்ளிட்ட பணிகளைச் செய்வர் என ரயில்வே அறிவித்திருந்தது.

தற்போது இது நடைமுறைக்கு வந்துள்ளது. முதல் கட்டமாக டார்ஜிலிங் இமாலயன் ரயில்களில் பணிப் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு நீல நிற கால் சட்டையும், வெள்ளை நிற சட்டையும் சீருடையாக வழங்கப்பட்டுள்ளது. வெள்ளைச் சட்டைக்கு மேல் அணிந்து கொள்வதற்காக கைகள் இல்லாத நீல நிற மேல் அங்கியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ரயில் பயணத்தின் போது அசைவுகள் இருப்பதால், விமான பணிப் பெண்கள் அணிந்திருப்பது போன்ற சீருடைகள், இவர்களுக்கு வசதியாக இருக்காது. அதனால் தான், கால் சட்டை வழங்கப் பட்டுள்ளது. நாகரீகம் கருதி நீல நிறம் தேர்வு செய்யப் பட்டுள்ளது.

டார்ஜிலிங் ரயில்களில் பணிப் பெண்கள் நியமிக்கப்பட்டாலும், மும்பை-டெல்லி ராஜதானி ரயில்கள் வரும் நவம்பரில் இருந்து நியமிக்கப்பட உள்ளனர் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+