உளவுப் பிரிவின் செயல்பாடுகளில் பெரும் ஓட்டை: மன்மோகன் சிங்

டெல்லியில், ராஷ்டிரபதி பவனில் 2 நாள் ஆளுநர்கள் மாநாடு நேற்றுடன் முடிவடைந்தது. இந்த மாநாட்டில் தீவிரவாத தடுப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. நிறைவு நாளான நேற்று பிரதமர் மன்மோகன் சிங் நிறைவுரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்,ஜெய்ப்பூர், அகமதாபாத், பெங்களூர், டெல்லி ஆகிய இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன. நமது உளவு துறையில் பெரும் ஓட்டைகள் இருப்பது உண்மைதான்.
தீவிரவாதத்தைத் தடுக்க, அதை ஒடுக்க தீவிரவாத தடுப்புச் சட்டத்தை மேலும் வலுவுள்ளதாகாக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. தற்போதுள்ள சட்டங்களும் கடுமையானதாக்கப்படும்.
தீவிரவாதத்ைத அடக்குவதில் அரசு மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. தீவிரவாதிகளிடம் மென்மையான போக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. தீவிரவாதம் கடுமையான முறையில் ஒடுக்கப்படும் என்றார் பிரதமர்.












Click it and Unblock the Notifications