சென்னை: அரசு பஸ் மரத்தில் மோதி 35 பேர் படுகாயம்
சென்னை: சென்னை அருகே தாம்பரம் சானட்டோரியத்தில், வேகமாக வந்த அரசு போக்குவரத்துக் கழக பேருந்து, சாலையோர மரத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், 35 பயணிகள் படுகாயமடைந்தனர். நள்ளிரவில் நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையிலிருந்து கும்பகோணம் செல்லும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நேற்று இரவு 10.20 மணியளவில் புறப்பட்டது.
பேருந்தில் 35 பயணிகளும், ஓட்டுநர், நடத்துனரும் இருந்தனர். பேருந்து 11.30 மணியளவில் தாம்பரம் சானட்டோரியம் பகுதியில் உள்ள மெப்ஸ் தொழிற்பேட்டையைத் தாண்டி வந்து கொண்டிருந்தது.
படு வேகமாக வந்த பேருந்து திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் இருந்த அனைவருமே படுகாயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் இல்லை.
தகவல் அறிந்ததும் புறநகர் காவல்துறை ஆணையர் ஜாங்கிட் மற்றும் போலீஸார் விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேருந்து ஓட்டுநர், பேருந்தை படு வேகமாக ஓட்டி வந்ததாக பயணிகள் சிலர் தெரிவித்தனர். இந்த வேகம்தான் விபத்துக்கு முக்கிய காரணம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications