அமைச்சர் வீராசாமி பெயரில் மிரட்டல் - புகார் கூறியவரின் வக்கீல் கைது
சென்னை: அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் அடியாட்கள் மிரட்டியதாக போலீஸில் புகார் கொடுத்த நபரின் வழக்கறிஞரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முருகேசன். கட்டடத் தொழிலாளியான இவர் கடந்த 50ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை வாங்கிய நிலத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் ரூ. 25 கோடி மதிப்புள்ள இந்த இடத்தை சந்திரசேகர் என்பவர் ஆக்கிரமிக்க முயல்வதாகவும், அவர் அனுப்பிய ஆட்கள் வீட்டில் வந்து சுற்றுச்சுவரை இடித்தும், மரங்களை வெட்டியும் மிரட்டியதாகவும், இதுகுறித்து தட்டிக் கேட்டபோது, அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் உத்தரவுப்படி தாங்கள் வந்துள்ளதாக கூறி மிரட்டியதாகவும் போலீஸில் புகார் கொடுத்தார் முருகேசன்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்தப் புகாரை திட்டவட்டமாக மறுத்தார் அமைச்சர் ஆற்காடு வீராசாமி. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீஸாருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பினார்.
அதில், எனக்கும், இந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் இல்லை. அரசியல் உள்நோக்கத்தோடு இந்த புகார் கூறப்பட்டுள்ளது. எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல் இது. இதுகுறித்து முருகேசன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென முருகேசனின் வழக்கறிஞர் எழில் கைது செய்யப்பட்டார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications