அமெரிக்கன் கல்லூரியில் வகுப்பறைகள் திறப்பு-பதட்டம் நீடிப்பு!
மதுரை: முதல்வர் பதவி தொடர்பான சிக்கலில் தவித்து வரும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நேற்று வகுப்பறைகள் திறக்கப்பட்டு இளங்கலை வகுப்புகள் தொடங்கின. இருப்பினும் ஒருதரப்பு மாணவர்கள் கோஷமிட்டபடி மாணவர்களை வெளியேறுமாறு கூறியதால் தொடர்ந்து அங்கு பதட்டம் நீடித்து வருகிறது.
அமெரிக்கன் கல்லூரி முதல்வராக இருந்த சின்னராஜ் ஜோசப்புக்குப் பதில், ஜார்ஜ் செல்வகுமார், பிஷப் கிறிஸ்டோபர் ஆசிர் புதிய முதல்வராக நியமித்தார். இதையடுத்து அமெரிக்கன் கல்லூரியில் பெரும் மோதல் வெடித்தது. கல்லூரிக்கு காலவரையின்றி விடுமுறை விடப்பட்டது. கல்லூரிக்குள் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு சின்னராஜ் ஜோசப்பின் ஆதரவு ஆசிரியர்கள் வகுப்புகளைத் தொடங்கினர். ஆனால் வகுப்பறைகள் திறக்கப்படவில்லை.இதையடுத்து மரத்தடிகளில் வகுப்புகள் நடந்து வந்தன.
இந்த நிலையில் நேற்று பிஷப் தரப்பு நியமித்த முதல்வர் செல்வக்குமார் ஆதரவு ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினர். வகுப்பறைகள் திறக்கப்பட்டு, இளங்கலை வகுப்புகள் தொடங்கின.
இதையொட்டி ஏராளமான மாணவர்கள் நேற்று கல்லூரிக்கு வந்தனர்.
பாடம் நடந்து கொண்டிருந்தபோது சிலர் மாணவர்களை வெளியேறும்படி தெரிவித்தனர். மைக்கில் கோஷங்களை எழுப்பியபடி சென்ற மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் கல்லூரி வளாகத்தில் போலீஸார் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பொறுப்பு முதல்வரான ஜார்ஜ் செல்வகுமார், பர்சாராக செயல்பட்ட தவமணி கிறிஸ்டோபர், தேர்வாணையர் அலெக்சாண்டர் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், செப்டம்பர் 10ம் தேதி முதுகலை பட்ட வகுப்புகளும், நேற்று இளங்கலை பட்ட வகுப்புகளும் திறக்கப்பட்டன. ரெகுலர் மாணவர்கள் ஆயிரத்து 700 பேரில் ஆயிரத்து 300 பேர் வந்துவிட்டனர்.
ஆசிரியர்கள் 107 பேரில் 55 பேர் வந்தனர். 39 பேர் ஆப்சென்ட் ஆகினர். 5 பேர் மருத்துவ விடுப்பில் உள்ளனர். அலுவலர்கள் 74 பேரில் 38 பேர் வந்திருந்தனர். சிலர் சூழ்ச்சி செய்து வகுப்பு நடத்த இடையூறு செய்கின்றனர்.
நேற்று வகுப்புக்கு செல்லாத ஆசிரியர்கள், மாணவர்கள் சிலர் கண்காணிப்பு காமிராவை உடைத்துள்ளனர். தமிழக அரசு, கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் கல்லூரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செப்டம்பர் 22ம் தேதி நிர்வாக கவுன்சில் மீண்டும் கூட உள்ளது. சின்னராஜ் ஜோசப் அங்கு ஆஜராக வாய்ப்பு தருவோம் என்றனர்.
முதல்வர் சின்னராஜ் ஜோசப் செய்தியாளர்களிடம் பேசுகையில், உயர்நீதிமன்றம் என்னை கல்லூரி விவகாரத்தில் தலையிடக் கூடாது என்றாலும், நான் தற்போதும் முதல்வராகத்தான் உள்ளேன்.
நான் எனது பொறுப்பை துணைமுதல்வர் அன்புதுரையிடம் தான் கொடுத்து விட்டு வந்தேன். அவர் தான் கல்லூரியை நிர்வகிக்க வேண்டும். இதற்கு அரசும், பொதுமக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்.
கல்லூரியில் நடந்த வன்முறை குறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்த வேண்டும். கல்லூரி நிலை குறித்து ஆராய அரசு குழு அமைக்க வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications