நாடாளுமன்ற தேர்தல் முடிவில் தான் அதிமுகவின் எதி்ர்காலம்-ஜெ

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. அதில் ஜெயலலிதா பேசியதாவது:
ஆறாவது முறையாக என்னை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியின் வளர்ச்சிக்காக என் சக்திக்குட்பட்டு நான் பாடுபடுவேன்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை பற்றிய அறிவிப்பை வெளியிட்டேன். கடந்த 7 மாதத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எனக்கு முழு திருப்தி அளிக்கும் வகையில் பாசறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
35 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் புதிய உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இதற்கான பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், பல புதிய திட்டங்களை நான் அவ்வப்போது அறிவிப்பேன். அவற்றை நீங்கள் செயல்படுத்த வேண்டும்.
ஓபிக்கு நன்றி:
கடந்த 14ம் தேதி தேனி ஆண்டிப்பட்டியில் பொதுக் கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எனது பாராட்டுகள்.
திமுக வழக்கம்போல் வன்முறை:
நேற்று நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் வழக்கம் போல திமுகவினர் வன்முறையில் இறங்கி அதிமுகவினரை அடித்து காயப்படுத்தியிருக்கிறார்கள்.
திமுக ஆட்சியில் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் இத்தகைய வன்முறைகள் நடைபெறுகின்றன. இதற்காக அதிமுகவினர் மனச்சோர்வு அடைய வேண்டாம். நமக்கு ஒரு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது.
இடைத்தேர்தல் போல பொதுத் தேர்தல்களில் திமுகவினரால் வன்முறைகளை நடத்த முடியாது. நம்முடைய எதிர்கால வெற்றியை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது. எனவே, நீங்கள் உற்சாகத்தோடும், ஒற்றுமையோடும் பணியாற்ற வேண்டும்.
நாம் மிக கவனமாக வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும். வாக்குச் சாவடிகளுக்கு பொது மக்களை அழைத்து வருவதில் கவனம் தேவை. வாக்குச்சாவடி ஏஜெண்டுகளாக நியமிக்கப்பட்டவர்கள் கடைசி வரை இருக்க வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலில் தான் நம் எதிர்காலமே:
நம்முடைய எதிர்காலமும், நம் கட்சியின் எதிர்காலமும் வரும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியில் தான் அடங்கியுள்ளது. வெற்றி ஒன்றே இலக்கு, வெற்றி ஒன்றே குறிக்கோள் என்று நீங்கள் செயல்பட வேண்டும். மகத்தான வெற்றியை ஈட்டும் வரை நாம் எதைப்பற்றியும் சிந்திக்கக்கூடாது.
உங்களுக்காக நான் இருக்கிறேன். உங்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் நான் தீர்த்து வைக்கிறேன். எனக்காகவும், நம் கட்சிக்காகவும் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு முழு வெற்றியை தேடி தருவோம் என்று செயல்பட வேண்டும்.
அதில் தான் நம்முடைய, நம் கட்சியின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது என்பதை உணர்ந்து நீங்கள் பணியாற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
சில பழம் தின்னி வெளவால்கள்:
நம் கட்சியில் இருந்த சில பழம் தின்னி வெளவால்கள், வேடந்தாங்கல் பறவைகள், கட்சிக்கு துரோகம் செய்து விட்டு அக்கறைக்கு தாவிச் சென்று அங்கே சிறுமைப்படுகிறார்கள். அவமானப்படுத்தப்படுகிறார்கள்.
சேடப்பட்டி முத்தையா:
சேடப்பட்டி முத்தையா 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு எத்தகைய மரியாதையுடனும், கெளரவத்துடனும் இருந்தார் (சபாநாயகராக இருந்தபோது சட்டசபையில் ஜெ காலில் விழுந்தார்..) அவர் திமுகவுக்கு போய் முதலமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன் வரிசையில் அமர்ந்திருந்த போது, முதல்வரின் உத்தரவுப்படி பின் வரிசைக்கு துரத்தப் பட்டு அந்த விழாவிலிருந்தே வெளியேறும் நிலை உருவாகி இருக்கிறது.
மூட்டை தூக்கம் செல்வகணபதி:
இங்கே இளம் வயதிலேயே கட்சிப் பொறுப்பு, அமைச்சர் பொறுப்பு என பல்வேறு பொறுப்புகளை பெற்று மரியாதையுடனும், மிடுக்குடனும், ஸ்டைலாகவும் திரிந்த செல்வகணபதி, திமுகவுக்கு போய் மூட்டை தூக்குகிறார்.
அவமானம்.. சிறுமை..:
ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் விழா மேடையில் வீரபாண்டி ஆறுமுகம் கம்பீரமாக அரிசி வழங்குகிறார். அவருக்கு பின்னால் செல்வகணபதி நின்று கொண்டு மூட்டை தூக்கி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இது தான் திமுகவுக்கு சென்றவர்களின் இன்றைய நிலையாகும். அங்கே அவர்கள் அவமானப்படுத்தப்படுவதுடன் மட்டுமல்லாமல் சிறுமைப்படுத்தப்படுகிறார்கள். அங்கே சென்றால் நட்டாற்றில் விட்டுவிடுவார்கள்.
கொடநாடு கவுன்சிலர் 'அம்போ':
அதற்கு ஒரு உதாரணம் கொடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்த அதிமுக கவுன்சிலரை 2 லட்சம் பணம், 2 ஏக்கர் நிலம், வீடு தருவதாக கூறி ஏமாற்றி அண்ணா அறிவாலயம் அழைத்துச் சென்று கருணாநிதியுடன் போட்டோ எடுத்து பத்திரிகைகளுக்கு கொடுத்ததுடன், அவரை அம்போ என்று விட்டுவிட்டு சென்று விட்டார்கள்.
திமுகவுக்கு போனால்...
சென்னையையே பார்க்காத அந்த கவுன்சிலர், எப்படியோ அலைந்து திரிந்து பஸ் ஏறி கொடநாடு போய் சேர்ந்தார். அம்மா நான் தவறு செய்து விட்டேன். என்னை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று இப்போது மனு போட்டுக் கொண்டிருக்கிறார். இது தான் திமுகவுக்கு போனவர்களின் நிலையாகும் என்றார் ஜெயலலிதா.
-
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
திமுக எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியதில் திருப்தி இல்லை.. இருந்தாலும்! சிபிஎம் சண்முகம் பேட்டி! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
திமுக - சிபிஎம் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது.. 5 இடங்கள் ஒதுக்கீடு! முடிவுக்கு வந்தது நீண்ட இழுபறி -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications