சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்களுக்கு ஜாமீன் இல்லை
சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் ராஜரத்தினம், யோக ரத்தினம் மற்றும் சண்முக ராஜா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை சென்னை அமர்வு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து விட்டது.
சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 தொழிலாளர்கள் பலியாயினர். இதையடுத்து மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முதலில் கடை மேலாளர் செல்வம் மற்றும் கண்காணிப்பாளர் ஜெபசிங் ஆகியோரைக் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து உரிமையாளர்களான யோகரத்தினம், ராஜரத்தினம், சண்முகத்துரை ஆகியோர் தலைமறைவானார்கள். இருவரும் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இதையடுத்து 3 பேரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதைத் தொடர்ந்து 3 பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி 3 பேரும் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி தேவதாஸ், 3 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதற்கிடையே, செல்வம், ஜெபசிங் ஆகியோர் தாக்கல்செய்த ஜாமீன் மனுக்களை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் இருவரையும் ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications