ஒசூர் கோவிலில் 48 பவுன் நகை கொள்ளை!
Subscribe to Oneindia Tamil
ஒசூர்: ஒசூர் அருகே பிரபல கோவிலில் 48 பவுன் தங்க நகைகள் மற்றும் 16 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் தாசனபுரத்தில் மிகப் பழமையான புகழ் பெற்ற வெங்கடாஜலபதி கோயில் உள்ளது.
இந்த கோயிலில் பூசாரிகள் வெங்கடேஷ், நாராயணப்பா ஆகியோர் பூஜையை முடித்து விட்டு வீடு திரும்பினர். மறு நாள் காலையில் பூசாரி வெங்கடேஷ் மனைவி விஜயலட்சுமி கோயில் முன்பு சுத்தம் செய்ய சென்றார். அப்போது கோயில் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கோயிலில் இருந்த 48 தங்க நகைகள் மற்றும் 16 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications