சீனா: இரவு விடுதியில் பெரும் தீவிபத்து - 43 பேர் பலி
பெய்ஜிங்: தெற்கு சீனாவில் உள்ள இரவு கிளப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 43 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 88 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஹாங்காங் - சீனா எல்லையில் உள்ள குவாங்டாங் மாகாணம் ஷென்சென் பகுதியில் இரவு விடுதி உள்ளது. இந்த கிளப்பில் நேற்று இரவு கேளிக்கை விருந்தில் பலர் பங்கேற்றனர். அப்போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
இதில் சிக்கி 43 பேர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். 88 பேர் படுகாயமடைந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிளப்பின் மூன்றாவது தளத்தில் சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடியதாகவும், அதனால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர். தீவிபத்து ஏற்பட்ட உடன் தப்பிப்பதற்காக முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி சிலர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் உள்ள கிளப், பார், தியேட்டர் போன்ற பொது இடங்களில் பாதுகாப்பு வசதிகள் கடைபிடிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக பல விபத்துகள் அங்கு தொடர்ந்து நடந்து வருகிறது.
கடந்த டிசம்பர் 2000ம் ஆண்டு நைட்கிளப் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 309 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications