வன்முறையை வேரோடு வீழ்த்துவோம்: ஜெயலலிதா

சர்வதேச அமைதி தினத்தையொட்டி ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
இன்றைக்கு இந்தியா இரக்கமற்ற வர்களின் வன்செயல்களாலும், கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களாலும் சின்னா பின்னப்படுத்தப்பட்டிருப்பதை மிகுந்த மன வேதனையோடு பார்க்கிறோம். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை அப்பாவி மக்களின் உயிர்கள் ஒவ்வொரு நாளும் பறிக்கப்படுகின்றன.
மக்கள் கூட்டம் மிகுந்த கடை வீதிகளில் குண்டுகள் வெடிக்கின்றன. ரெயில்களிலும், ரெயில் நிலையங் களிலும், பேருந்து நிலையங்களிலும், இன்ன பிற பொது இடங்களிலும் இத்தகைய வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்த தாக்குதல்களில் பாதிக்கப்படுவோர் எல்லாம் சாதாரண பொதுமக்களே.
யாரையாவது அர்த்தமற்று கொன்று குவிப்பதை எந்த மதமாவது ஏற்குமா? ஆதரிக்குமா? எத்தனையோ நூற்றாண்டுகளாக மதங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்து இந்தியாவில் தழைத்து வந்திருக் கின்றன. ஒன்றுக்கு அடிபணிந்து மற்றொன்று இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதில்லை. இன்றைக்கு ஏன் மற்ற மதத்தினர் மீது இவ்வளவு வெறுப்பு?
சர்வதேச அமைதி நாளான இந்த நாளில் நம் முன்னோர்கள் உயிராய் மதித்த உயர்ந்த சமய நெறிகளுக்கு நம்மையே நாம் மீண்டும் அர்ப்பணிப்போம். வன்முறையை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த நாம் அனைவரும் சபதம் ஏற்போம். ஒருவரையொருவர் சகோதர சகோதரிகளாக போற்றி நேசிக்கும் பண்பை பெறுவோம். அனைவரும் வாழ்வு பெற அமைதிக்கு வாய்ப்பளிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!











Click it and Unblock the Notifications