திருச்சி செல்லமணி அன் கோவில் பெரும் தீவிபத்து
திருச்சி: திருச்சியில் உள்ள பிரபல செல்லமணி அன் கோவில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. ஒன்றரை கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.
சமீபத்தில் சென்னை சரவணா ஸ்டோர்ஸில் பெரும் தீவிபத்து ஏற்பட்டு 2 உயிர்கள் பலியாகின. அதேபோல, அண்ணா சாலை ஸ்பென்சர் பிளாசாவிலும் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. ஆனால்தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டதால் பெரும அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த நிலையில் திருச்சி சின்னக்கடை வீதியில் உள்ள பிரபலமான செல்லமணி அன் கோ கடையில் இன்று அதிகாலை பெரும் தீவிபத்து ஏற்பட்டது.
தீபாவளிப் பண்டிகையையொட்டி இங்கு பெருமளவிலான பொருட்கள் வாங்கி வைக்கப்பட்டு விற்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் பெரும்பாலான பொருட்கள் எரிந்து சாம்பலியான.
தகவல் அறிந்து வந்ததீயணைப்புப் படையினர் பெரும் போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். விபத்தில் ரூ. ஒன்றரை கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தீயில் கருகியவை பெரும்பாலும் டிவி, ஏசி மெஷின், பிரிட்ஜ் போன்றவையே ஆகும்.
அருகில் உள்ள பேக்கரியிலிருந்து தீ பரவியதா அல்லது மின்கசிவால் ஏற்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications