நோயாளி மரணம் - ஆபரேஷன் செய்த டாக்டர் மீது வழக்கு
திருவாரூர்: திருவாரூரில் அரசு மருத்துவமனையில் ஆபரேஷன் செய்து கொண்ட நோயாளி திடீரென்று இறந்ததார். அவருக்கு ஆபரேஷன் செய்த டாக்டர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவாரூர் தென்றல் நகரை சேர்ந்தவர் அபிரானந்தம் (62). எலட்ரானிக் கடை உரிமையாளர். அடிக்கடி வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இதையடுத்து அவர் திருவாரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு பித்தப் பையில் கல் இருப்பது தெரியவந்தது.
இதனால் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அபிரானந்தத்துக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், ஆபேரசன் செய்த டாக்டர்களின் கவனக்குறைவினால்தான் அபிரானந்தம் இறந்து போனார் என்று கூறி அவரது உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்துவிட்டனர்.
தகவலறிந்த திருவாரூர் போலீஸார் அவர்களை சமரசம் செய்தனர். பின்னர் ஆபரேசன் செய்த டாக்டர் சுந்தர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications