திருச்சி சிறையில் கைதிகள் மோதல் - பதட்டம்
திருச்சி: திருச்சி சிறையில் கைதிகள் இருவர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (27). திருப்பூர் பத்மாவதி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (24). காரைக்குடி பகுதிகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவ வழக்குகள் தொடர்பாக இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நாகராஜின் தங்கைக்கும், பிரகாஷுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே பகை ஏற்பட்டது.
இந்த நிலையில் சிறையில் இருக்கும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து திருச்சி மத்திய சிறை ஜெயிலர் இளவரசன் அளித்த புகாரின்பேரில் கே.கே.நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோதல் தொடர்பாக நாகராஜன், பிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications