அக்-1ல் திருப்பதி பிரம்மோற்சவம் தொடக்கம்
திருமலை: திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா அக்டோபர் முதல் தேதி தொடங்குகிறது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
திருப்பதி அருள்மிகு ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் பிரமோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த 10 நாள் திருவிழாவில் பக்தி பரவசத்துடன் கலந்து கொள்வார்கள்.
பிரசித்தி பெற்ற இந்த திருவிழா இந்த ஆண்டு அக்டோபர் முதல் தேதி கோலாகலமாக தொடங்குகி 9ம் தேதி வரை நடைபெறுகிறது. கோவிலுக்கு தீவிரவாதி அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பை பலப்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, கோவிலுக்கு வரும் வாகனங்கள் அனைத்தையும் அலிபிரியில் முழு அளவில் சோதனை செய்யப்படும். இதற்காக அலிபிரியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட உள்ளனற்.
3 கட்ட சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படும். இதற்காக தனித்தனி செக் போஸ்ட்டுகள் அமைக்கப்படுகிறது. திருப்பதி மலையில் ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும். மேலும் திருப்பதி கோவிலைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபாடுவார்கள்.
திருப்பதி மலையில் தற்போது பக்தர்கள் வசதிக்காக 8 இலவச பஸ்கள் விடப்பட்டுள்ளன. இதன் எண்ணிக்கையை 10ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான தரப்பில் கூறப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications