கட்டட விதிமீறல்: நாளை ரங்கநாதன் தெருவில் ஆய்வு!

சரவணா ஸ்டோர்ஸ் தீவிபத்ைதத் தொடர்ந்து ரங்கநாதன் தெருவில் உள்ள வணிக நிறுவனங்களில் நடந்துள்ள விதி மீறல்கள், ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோரி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமமூர்த்தி தலைமையிலான குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்தக் குழு நாளை ரங்கநாதன் தெருவில் நடந்துள்ள விதி மீறல்கள் குறித்து நேரில் ஆய்வு செய்யவுள்ளது. இத்தகவலை மேயர் மா.சுப்ரமணியம் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கட்டட விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்யும் குழு அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும். பின்னர் விதி மீறல் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பப்படும். அதன் பின்னர் மேல் நடவடிக்கைகள் இருக்கும்.
பொது இடங்களில் அக்டோபர் 2ம் தேதி முதல் புகை பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. அதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து மாநகராட்சி ஆலோசனை செய்து வருகிறது.
சென்னை மாநகராட்சியின் 320வது ஆண்டு விழாவையொட்டி வருகிற 28ம் தேதி கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது என்றார் அவர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications