கோவை பாஸ்போர்ட் அலுவலகம்-போலி புரோக்கர்கள் கைது
கோவை: கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் பெற்றுத் தருவதாக கூறி மக்களை ஏமாற்றி பணம் வசூலிக்க முயன்ற போலி புரோக்கர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. நீண்டகால கோரிக்கை நிறைவேறியதால் உற்சாகமான மக்கள் பாஸ்போர்ட் விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கூட்டம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் வரிசையில் நின்று கொண்டிருந்த மக்களிடம் சென்ற இரண்டு பேர், தாங்கள் பாஸ்போர்ட் பெற்று தருவதாக கூறி பணம் வசூல் செய்ய முயன்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த பாஸ்போர்ட் அதிகாரி முருகன் மற்றும் அலுவலக ஊழியர்கள் அந்த இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். பின்னர் போலீஸாரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.
போலீஸார் அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள், கோவை குனியமுத்தூரை சேர்ந்த ரங்கநாதன் (41) என்றும், மற்றொருவர் பொள்ளாச்சியை சேர்ந்த நாகூர் மீரான் என்பது தெரியவந்தது. இருவரும் போலி புரோக்கர்கள் என்பதை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications