தேமுதிகவுடன் கூட்டணி: சிபிஐ விளக்கம்
சென்னை: கட்சிகள் சிபிஎம் தலைவர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளனர். ஜனநாயகத்தில் யாரையும் புறந்தள்ளி விடமுடியாது என்று கூறியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா.
அவர் கூறியதாவது:
பாஜக, காங்கிரஸ் கட்சிகளை எதிர்த்து மாற்று அணியை அமைப்போம். சிபிஎம் தலைவர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளனர். விஜயகாந்த்துடன் கூட்டணி வைப்பது குறித்த கேட்கின்றனர். ஜனநாயகத்தில் யாரையும் புறந்தள்ளி விட முடியாது.
சிபிஐ, சிபிஎம், ஆர்எஸ்பி, பார்வர்ட் பிளாக் ஆகிய இடதுசாரி கட்சிகள் தெலுங்க தேசம், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து வரும் 25ம் தேதி கண்டன இயக்கம் நடத்தப்படும். அதே நாளில் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டமும் நடத்தப்படும்.
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு கூட்டத் தொடர் இல்லாதது இதுவே முதல் முறையாகும். நாடாளுமன்றத்தை உரிய காலத்தில் நடத்த மத்திய அரசு முன்வரவில்லை. அக்டோபர் 17ம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அது மழைக்கால கூட்டத் தொடரா அல்லது குளிர்கால கூட்டத் தொடரா, இரண்டும் இணைந்ததா என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.
பீகர், ஒரிஸ்ஸா மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் அணு ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பிரச்சனையில் நாடாளுமன்றத்தை எதிர்கொள்ள மத்திய அரசு பயப்படுகிறது.
நாட்டின் பல நகரங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்துள்ளன. இதனால் மக்கள் பீதியுடன் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரிஸ்ஸா, கர்நாடகம் மாநிலங்களில் தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பஜ்ரங் தள், விஎச்பியினர் கைதாகியுள்ளனர். தேர்தல் ஆதாயத்துக்காக பாஜக இதுபோன்ற சம்பவங்கள் நடத்துகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications