இலவச சைக்கிள்: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
சுரண்டை: தங்கள் குழந்தைகளுக்கும் அரசின் இலவச சைக்கிளை தர வேண்டும் என்று கூறி ஆதி திராவிட சமூக மாணவர்களின் பெற்றோர்கள் அரசு பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுரண்டை அருகே சேர்ந்தமரம் அரசு பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெறுவதாக இருந்தது. விழாவில் கலந்து கொள்ள முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர். 230 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் தயாராக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதே பள்ளியில் பயிலும் 6 ஆதி திராவிட மாணவிகளின் பெற்றோர்கள் திடீரென்று தலைமை ஆசிரியையை முற்றுகையி்ட்டனர். தங்கள் குழந்தைகளுக்கும் சைக்கிள் வழங்க வேண்டும் என்று கூறி வாக்குவாதம் செய்தனர்.
அதற்கு 230 சைக்கிள்தான் வந்துள்ளது. உங்கள் குழந்தைகளுக்கு ஆதி திராவிர நலத்துறை மூலம் இன்னும் 6 சைக்கிள் வரவேண்டியுள்ளது. வந்தவுடன் கண்டிப்பாக வழங்கப்படும் என்று தலைமை ஆசிரியை கூறினார். அதை ஏற்க மறுத்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு சைக்கிள் வழங்காமல் விழாவை நடத்தக் கூடாது என்றனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கல்வி துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சேர்ந்தமரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதற்குள் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்து சமாதானப்படுத்தினர். எனினும் சைக்கிள் வழங்கும் விழா தள்ளி வைக்கப்பட்டது.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications