மெக்கெயினை முந்தினார் பராக் ஒபாமா!
வாஷிங்டன்: பொருளாதாரப் பெருமந்தம் நிலவும் இந்த சூழலில் எடுக்கப்பட்ட ஏ.பி.சி. தொலைக்காட்சி நடத்திய தேர்தல் கணிப்பில் அதிபர் பதவிக்கு மெக்கெயினை விட 9 சதவீத ஆதரவை கூடுதலாகப் பெற்றுள்ளார் அவரது போட்டியாளர் பாரக் ஒபாமா.
அமெரிக்கா கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் உலகின் மிகப்பெரிய நிதி நிறுவனங்கள் ஒன்றன பின் ஒன்றாக வீழ்ச்சியடைந்து வருகின்றன.
இந்தச் சரிவைத் தடுத்து நிறுத்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படுகிறதாம் அமெரிக்காவுக்கு.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலுக்கோ இன்னும் 6 வாரங்கள்தான் உள்ளன. இந்த சூழலில் அமெரிக்காவின் பிரபல மீடியாவான ஏபிசி நிறுவனம் இறுதிக்கட்ட தேர்தல் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.
இதில் பாரக் ஒபாமாவுக்கு 52 சதவீத ஆதரவும் புஷ்ஷின் கட்சியைச் சேர்ந்த மெக்கெனுக்கு 33 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது.
மெக்கெயினைவிட ஒபாமாவால் இந்த சூழலில் சிறப்பாக செயல்பட முடியும் என்றும், பொருளாதார நெருக்கடியைச் சீர்படுத்தும் கடின நடவடிக்கைகள் எடுப்பதில் ஒபாமா வல்லவர் என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு நடத்திய கருத்துக் கணிப்பில் இருவரும் கிட்டத்தட்ட சமமான ஆதரவுடன் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications