மணல் லாரி மோதி விவசாயி பலி

Subscribe to Oneindia Tamil

களக்காடு: நெல்லை அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்த விவசாயி மீது மணல் லாரி மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

களக்காடு அருகேயுள்ள மாவடியை சேர்ந்தவர் செல்லையா, விவசாயி. இவர் நேற்றிரவு வயலுக்கு சென்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தெற்கு மாவடி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த மணல் லாரி அவர் மீது மோதியது.

இதில் செல்லையா சம்பவ இடத்திலேயே பரிதாபமா இறந்தார். இதையறிந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் திரண்டனர். செல்லையா மீது மோதிய லாரியை அடித்து நொறுக்கினர்.

பின்னர் அந்த வழியாக வந்த மணல் லாரிகளையும் தாக்கி சேதப்படுத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்த நாங்குநேரி டிஎஸ்பி சிதம்பரநாதன், ஏர்வாடி இன்ஸ்பெக்டர் பெரிசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

கிராம மக்களுடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்க எடுப்பதாக போலீஸார் கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+