என் ஆட்சியில் மதக் கலவரமே இல்லை-ஜெ
சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் மதக்கலவரமோ, இனக் கலவரமோ நடைபெற்றதில்லை என்றும் சிறுபான்மையின மக்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக தான் இருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று அதிமுக சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இப்தார் விருந்து அளித்தார். இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, அவரது மனைவி, தலைமை காஜி உள்பட ஏராளமான முஸ்லீம் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
விழாவில் ஜெயலலிதா பேசுகையில், பல ஆண்டுகளாக முஸ்லீம்களுக்கு இப்தார் விருந்து அளித்து வருகிறேன். இந்த விருந்துக்கு தவறாமல் வந்து கலந்து கொண்டு என்னை பெருமைபடுத்தும் முஸ்லீம் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் எல்லா மதத்தைச் சார்ந்த மக்களும் ஒற்றுமையுடனும், சகோதர பாசத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் எந்தவிதமான மதக்கலவரமும் நடந்ததில்லை.
தற்போதும், பல மாநிலங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றாலும், தமிழகத்தில் மத நல்லிணக்கத்தோடும், ஒற்றுமையோடும் மக்கள் வாழ்கின்றனர்.
சிறுபான்மை சமுதாயத்தினருக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக நான் இருப்பேன். என் மீது முஸ்லீம் சமுதாயத்தினர் காட்டும் அன்பும், பாசமும் தொடர்ந்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
-
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
Gautami: அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி, பாமக போட்ட பிச்சை! சி.வி.சண்முகம் காட்டம் -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications