ராணுவத்தின் மினி கேம்ப் தகர்ப்பு: புலிகள்

மட்டக்களப்பு அருகே திகிலிவெட்டை என்ற இடத்தில் ராணுவ முகாமும், புற ராணுவ முகாமும் உள்ளது. இதற்கு மினி கேம்ப் என்று பெயர். இந்த முகாம் மீது விடுதலைப புலிகளின் கமாண்டோ படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர்.
இதில் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர். கால் மணி நேரத்திற்குள்ளாகவே அந்த மினி முகாம் தங்களது வசம் வந்து விட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
அங்கிருந்து ஒரு லைட் மெஷின் கன், ஐந்து தாக்குதல் துப்பாக்கிகள், வெடிபொருட்களை கைப்பற்றியுள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 8 பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையே, செங்கலடி என்ற இடத்தில் நடந்த தாக்குதலில், கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் ேசர்ந்த ஒருவர் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தமிழர்கள் வெளியேற புலிகள் கோரிக்கை:
இதற்கிடையே, கிளிநொச்சியை ராணுவம் சுற்றி வளைத்து தாக்கி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்ைகயாக தமிழர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு புலிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கிளிநொச்சி மீதான தாக்குதலில் இலங்கை ராணுவம் இப்போது முழு கவனம் செலுத்தி வருகிறது. விடுதலை ப்புலிகளின் தலைமை அலுவலகம், அரசியல் பிரிவு அலுவலகம் ஆகியவை இங்குதான் உள்ளன. கிளிநொச்சியை முற்றுகையிட ராணுவம் முன்னேறி வருகிறது.
இந்த நிலையில் கிளிநொச்சி நகரைவிட்டு பொது மக்கள் வெளியேற வேண்டும் என்று விடுதலைப்புலிகள் உத்தர விட்டு இருக்கிறார்கள். பொது மக்களின் பாதுகாப்பை கருதியே இந்த உத்தரவு பிறப்பித்து இருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
அதிரடிக்கு புலிகள் தயார்:
கிளிநொச்சியை பிடிக்க முன்னேறி வரும் சிங்கள ராணுவத்துக்கு தக்க பதிலடி கொடுக்க விடுதலைப் புலிகளும் தயாராகி வருகிறார்கள். எந்த நேரத்திலும் அதிரடி தாக்குதல் நடத்தி ராணுவத்தை திணற அடிக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளனர். பதுங்கு குழிகளையும் விடுதலைப் புலிகள் அமைத்து வருகிறார்கள்.
ராணுவத்தினர் கிளி நொச்சியில் இருந்து 4கி.மீ. தூரத்தில்தான் இருக் கிறார்கள். விரைவில் கிளிநொச்சியை எட்டி விடுவோம் என்று ராணுவ தளபதி சரத்பொன்சேகா கூறியுள்ளார். ஆனால் விடுதலைப் புலிகள் ஆங்காங்கே புதைத்து வைத்துள்ள கண்ணி வெடிகளை ராணுவத்தினரால் சமாளிக்க முடியுமா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications