படத்தை தடுப்பதுதான் காமராஜர் ஆட்சியா?-இளங்கோவன்
செங்கல்பட்டு: காமராஜர் ஆட்சிக்காலத்தில் நாம் நினைத்திருந்தால் பாரசக்தி, மனோகரா ஆகிய படங்களை திரையிட விடாமல் தடுத்திருக்கலாமே. ஆனால் காமராஜர் ஆட்சி புரிந்து வருகிறேன் என்று கூறிக் கொண்டு மதுரையில் ஒரு படத்ைத திரையிட விடாமல் தடுப்பதுதான் காமராஜர் ஆட்சியா?, இதுதான் ஜனநாயகமா? என்று மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேட்டுள்ளார்.
செங்கல்பட்டில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் இளங்கோவன் காதலில் விழுந்தேன் பட சர்ச்ைச குறித்து குறிப்பிட்டார்.
அவர் பேசுகையில், காமராஜர் ஆட்சி நடத்தி வருகிறோம் என்று கூறுகிறார்கள். ஒரு படத்தை மதுரையில் திரையிட விடாமல் தடுக்கிறார்கள். இதுதான் காமராஜர் ஆட்சியா.?
காமராஜர் ஆட்சியில் நாம் நினைத்திருந்தால் மனோகராவை தடுத்திருக்கலாமே, பராசக்தியை தடுத்திருக்கலாமே. நாடோடி மன்னனை ஊருக்குள்ளேயே வர விடாமல் தடுத்திருக்கலாமே. செய்தோமா, இல்லையே.
காமராஜர் ஆட்சியாக இருந்தால் மணல் திருட்டு நடைபெறாது. காவல் நிலையத்திற்குப் புகார் கூறச் செல்பவர்களிடம் பேப்பர் வாங்கி வருமாறு கூற மாட்டார்கள். இப்படி இருக்கையில் இதுதான் காமராஜர் ஆட்சியா, இதுதான் ஜனநாயகமா என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications