நவம்பரில் செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை
தென்காசி: செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதைப் பணிகள் நவம்பர் மாதம் தொடங்கும் என ரயில்வே இணை அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.
தென்காசி ரயில் நிலையத்தில் அமைக்கப்படவுள்ள அகல ரயில்பாதை பிளாட்பாரம் உள்ளிட்ட பணிகளை அமைச்சர் வேலு பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், செங்கோட்டை முதல் புனலூர் வரையிலான 47 கிமீ நீள அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் ரூ.357 கோடி ரூபாய் செலவில் நவம்பர் மாதம் துவங்க இருக்கிறது.
மலைப்பகுதியாகவும், அதிகமான குகைகள் உள்ள பாதையாகவும் இருப்பதால் கிலோ மீட்டருக்கு ரூ.7 கோடி ரூபாய் வரை செலவாகிறது. பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் செங்கோட்டை முதல் திருத்தங்கல் வரையுள்ள பயணிகளுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் வகையில் நிலைய வாரியாக டிக்கெட் ஓதுக்கிடு வழங்கப்படும். பிளாட்பாரம் கட்டணத்தை நீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
தீவிரவாதம் என்பது உலகளவிய பிரச்சனை. ரயில்வே துறையை பொறுத்தமட்டில் உடைகளை சோதனையிடுகிறோம். மோப்ப நாய்கள் மூலம் சோதனையிடுகிறோம். வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதற்கும் அவற்றை செயல் இழக்க செய்வதற்கும் தனித்தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு மெட்டல் டிடெக்டர்களும் வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே போலீசாருக்கு கூடுதலாக 29 வித அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மதுரை-திண்டுக்கல் இடையே இரட்டை டிராக் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் செங்கோட்டையிலிருந்து கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications