திருப்பத்தூர் அருகே தடம்புரண்ட ஏலகிரி எக்ஸ்பிரஸ்
திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை- சென்னை இடையிலான ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை தடம் புரண்டது. இருப்பினும் தடம் புரண்ட பெட்டியில் பயணிகள் யாரும் இல்லாததால் காயமேதும் இல்லை.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. காலை 5 மணிக்கு ஜோலார்பேட்டையிலிருந்து கிளம்பி 8 மணியளவில் சென்னையை இது சென்றடையும். மறுமார்க்கத்தில் மாலையில் சென்னையிலிருந்து கிளம்பி ஜோலார்ப்பேட்டை வந்து சேரும்.
இந்த ரயிலில் பெரும்பாலும் அலுவலகத்தில் பணியாற்றுவோர், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களே அதிகம் பயணம் செய்வர். இதனால் ஆபிசர்ஸ் டிரெயின் என்றும் இதற்கு செல்லப் பெயர் உண்டு.
இன்று காலை வழக்கம் போல ரயில் ஜோலார்பேட்டையிலிருந்து கிளம்பியது. திருப்பத்தூர் அருகே வரும்போது திடீரென ரயிலின் என்ஜினும், முதல் பெட்டியும் தண்டவாளத்தை விட்டு இறங்கின. உடனடியாக என்ஜின் டிரைவர் ரயிலை அவசர கால பிரேக்கைப் பயன்படுத்தி நிறுத்தினார்.
அதிர்ஷ்டவசமாக முதல் பெட்டியில் பயணிகள் யாரும் இல்லாததால் காயமோ, உயிர்ச்சேதமோ இல்லை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications