ஜெ. மீதான வழக்கு-14வது முறை ஒத்திவைப்பு
புவனகிரி: தேர்தல் கமிஷன் சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது பரங்கிப்பேட்டை நீதி மன்றத்தில் போடப்பட்ட வழக்கு விசாரணை 14-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, புவனகிரி ஆகிய 4 தொகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி போட்டியிட மனு தாக்கல் செய்தார்.
இதை எதிர்த்து திமுக எம்.பி. செ. குப்புசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து ஜெயலலிதா மீது தேர்தல் கமிஷன் வழக்கு தொடரலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன் அடிப்படையில் ஜெயலலிதா மீது புவனகிரி தொகுதி தேர்தல் அதிகாரி செல்வமணி பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த 2007 ம் ஆண்டு, ஜூன் 9-ம் தேதி வழக்கு தொடர்ந்தார்.
இதை எதிர்த்து ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
ஆகஸ்ட் 29-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது இவ் வழக்கு செப்டம்பர் 29-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி ரமேஷ் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு தடை இருப்பதால், வழக்கை அக்டோபர் 29-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு 14 வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications