முதல்வர் வீட்டுக்குள் நுழைந்த நபர் கைது
சென்னை: சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குள் திடீரென புகுந்த நபரை போலீஸார் பிடித்துக் கைதுசெய்தனர். அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் போல தோன்றுகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீட்டுக்குள் நுழைய அடுத்தடுத்து பலர் முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வர் கருணாநிதி வீட்டுக்குள்ளும் சிலர் நுழைய முயன்று பிடிபட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் முதல்வர் வீட்டிற்குள் நுழைவதற்காக இரும்பு கேட்டை திறக்க முயற்சித்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிவந்து அந்த ஆசாமியை மடக்கி பிடித்தனர். இருப்பினும் அந்த நபர் போலீசாரை கீழே தள்ளி விட்டு உள்ளே செல்ல முயன்றார்.
ஆனால் போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து அந்த நபர், முதல்வரிடம் மனு கொடுக்கப் போகிறேன், உள்ளே விடுங்கள் என்று கூறினார்.
அவரின் பேச்சும், செயலும் குழப்பமாக இருந்ததால், அந்த நபரை போலீஸார், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த நபரின் பெயர் வேலாயுதம் (40), சொந்த ஊர் தென்காசி என்று தெரிய வந்தது. மன நலம் பாதிக்கப்பட்டவர் போலத் தோன்றுகிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications