சிறார் இல்லத்திலிருந்து 9 பேர் தப்பி ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் அரசினர் கூர் நோக்கு இல்லத்திலிருந்து 9 சிறார்கள் தப்பி ஓடி விட்டனர். ஜன்னல் மேல் கம்பியை வளைத்து சுவர் ஏறிக் குதித்து இவர்கள் தப்பியுள்ளனர்.
வேலூர், சத்துவாச்சேரி பகுதியில் அரசினர் கூர்நோக்கு சிறார் பாதுகாப்பு இல்லம் உள்ளது. இங்கு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு போதிய பாதுகாப்பு இல்ைல என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது. இதுவரை 50 பேர் இங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் அங்கிருந்து 9 சிறுவர்கள் தப்பி ஓடி விட்டனர். ஜன்னல் கம்பியை வளைத்து வெளியேறிய அவர்கள் சுவர் ஏறிக் குதித்து தப்பி விட்டனர்.
இதையடுத்து அவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications